என்னது விஜய்யும் அஜித்தும் இணையப் போறாங்களா!... அதுவும் வெங்கட் பிரபு படத்துலயா?: அப்டேட் கொடுத்த பிரேமம் இயக்குநர்!

photo

'நேரம்' படத்தை இயக்கி தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் நிவின் பாலி, சாய்பல்லவி, அனுபாமா பரமேசுவரன் நடிப்பில் வெளியான ‘பிரேமம்' படத்தை இயக்கி பிரபலமானார். அந்த படம் மலையாளத்தை கடந்து தமிழில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அந்த படம் அவருக்கு மிகபெரிய பெயரை பெற்று தந்தது.

photo

தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் ‘கோல்டு’ திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அந்த வகையில் தற்போது அல்போன்ஸ் புத்தாண்டு வாழ்த்து சொல்லி தனது புதுவிதமான விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

photo

photo

1.வெங்கட் பிரபு, ஷங்கர், மணிரத்னம், கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் அல்லது பிரதீப் ரங்கநாதன் ஆகியோரால் படம் இயக்கப்பட தங்களுக்கு  பொருத்தமான நடிகைகளுடன் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார் நடிக்க வேண்டும்

photo

2. கமல்ஹாசன் & ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் படத்தை கமல்ஹாசன், மணிரத்னம், கார்த்திக் சுப்பராஜ், மணிகண்டன், லோகேஷ், கௌதம் மேனன் அல்லது பிரதீப் ரங்கநாதன் இவர்களுள் ஒருவர் இயக்க வேண்டும்.

3 ஜாக்கி சான், வில் ஸ்மித் அல்லது ரியான் கோஸ்லிங் போன்ற நடிகர்களுடன் ஸ்கார்லெட் ஜோஹன்சன் அல்லது அதற்கு ஏற்ற நடிகைகளுடன் தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்ப காலேஜ் பப்பலா பஸ் பாடலுடன் எஸ்.எஸ்.ராஜமௌலி ரீமேக்கில் விக்ரமார்குடுவை ஆங்கிலத்தில் பார்க்க வேண்டும்.

photo

4 பிருத்விராஜ் சுகுமாரன், பாசில் ஜோசப், அமல் நீரத், அன்வர் ரஷீத், வினீத் ஸ்ரீனிவாசன் அல்லது காலித் ரஹ்மான் இயக்க ஒரு அதிரடி டிராமா திரைப்படத்தில் மோகன்லால் மற்றும் மம்முட்டியைப் பார்க்க வேண்டும்.

5 ஃபஹத் ஃபாசில்,  நவாசுதீன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் வில்லன்களாக நடிக்கும் ஒரு படத்தில் ஃபர்ஹான் அக்தர் ஆமிர் கானையும் முடிந்தால் ஷாருக் கான் மற்றும் சல்மான் கானையும் மீண்டும் கொண்டுவருவதைப் பார்க்க வேண்டும். முடிந்தால் DON 3 :D என்றகூட பெயரிடலாம்.

photo

6 சினிமா கல்வியில் ஒரு மாற்றத்தைக் காண வேண்டும். கமல்ஹாசன் சார் போன்ற ஒருவர் யூடியூப் மூலமாகவோ அல்லது சமீபத்திய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் சினிமாவின் 24 கிராஃப்ட்ஸ் உடனான நேரடி உரையாடல் மூலமாகவோ மாணவர்களுக்குக் கற்பிப்பார் என்று நம்புகிறேன். கமல்ஹாசன் சார் ஒரு வகுப்பு எடுத்தால், 10,000 அல்லது 1 லட்சம் புதிய மாணவர்கள் சினிமா கற்று இந்திய சினிமாவுக்கு சப்போட்டாக  வருவார்கள் என்று நான் நம்புகிறேன்.

 அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

என தனது ஸ்டைலில் இந்த வருடத்திற்கான தனது மொத்த ஆசையையும் கொட்டி தீர்த்துள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.



 

Share this story