பிரபல நடன இயக்குனரை இயக்கும் அல்போன்ஸ் புத்திரன்.. புதிய படத்தின் அப்டேட்

sandy
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழில் நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதன்பிறகு மலையாளத்தில் உருவான ‘பிரேமம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கினார். இந்த படம் இந்தியா முழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து பிரத்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கோல்டு’ இயக்கினார். 

sandy

இதையடுத்து அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரித்து வருகிறார். இளையராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. 

sandy

பிரபல நடன இயக்குனரான சாண்டி இப்படத்தில் ஹீரோ நடிக்கிறார். வித்தியாசமான காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. விரைவில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Share this story