எனக்கு 29 வயதா... ? நம்ப முடியவில்லை... நடிகை ராஷ்மிகாவின் பதிவு வைரல்..!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் இன்னும் மூன்று நாளில் வர உள்ள நிலையில், அவரது இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த 'சிக்கந்தர்' படம் சமீபத்தில் வெளியானது. அதனைத் தவிர, தற்போது அவர் தனுஷுடன் 'குபேரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், 'கேர்ள் பிரண்ட்' என்ற தெலுங்கு படத்திலும், ஒரு ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது பிறந்த நாள் மாதம் தொடங்கியதை தொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறப்பு பதிவை செய்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் "இது என் பிறந்தநாள் மாதம்! நான் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறேன். பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன் 'வயதாக வயதாக பிறந்தநாள் கொண்டாடும் ஆர்வம் குறைந்து விடும்' என்று. ஆனால் என் விஷயத்தில் அது எதுவும் நடக்கவில்லை. வயது அதிகரிக்கும்போது, பிறந்தநாள் கொண்டாடும் ஆர்வம் எனக்குக் கூட அதிகரித்தே வருகிறது.
எனக்கு ஏற்கனவே 29 வயது ஆகிவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை! ஆனால் அதே நேரத்தில், மற்றொரு வருடத்தை ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் கடந்து வந்தேன் என்பதை நினைக்கும் போது, நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பிறந்த நாளை நான் கொண்டாடாமல் விடுவேனா?" என்று அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகின்றன.