இரண்டாவது திருமணத்திற்கு தயாரான அமலாபால்

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான அமலாபால்

தென்னிந்தியாவின் பிரபல நடிகைகளில் அமலா பாலும் ஒருவர். மலையாள நடிகையான இவர், ‘நீலதாமரா’ என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு ‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்து விமர்சனத்திற்கு ஆளானார். பின்னர் ‘மைனா‘ படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். 

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான அமலாபால்

இதையடுத்து விகடகவி, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லாத பட்டதாரி 2, திருட்டுப்பயலே 2, ராட்சஸன், ஆடை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் ராட்சஸன் திரைப்படம் நல்ல பெயரை கொடுத்தது. ஆனால் ஆடை படத்தில் நடித்து அந்த பெயரை கெடுத்துக்கொண்டார்.  

null

இதனிடையே, நடிகை அமலா பால் விரைவில் திருமணம் செய்து கொள்கிறார். இதை அமலாவின் காதலரான ஜெகத் தேசாய் இன்ஸ்டாகிராமில் அறிவித்து உள்ளார். ஜகத், அமலாவுக்கு ப்ரோபோஸ் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி உள்ளார்.

Share this story