திருமணமான 2மாதங்களில் கர்ப்பம்!.......- அமலாபாலுக்கு குவியும் வாழ்த்துகள்.

photo

நடிகை அமலாபால் இரண்டாவதாக ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது தான் கர்பமாக இருப்பதாக சமூகவலைதளம் மூலமாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

photo

கடந்த 2013ஆம் ஆண்டு அமலாபால்- இயக்குநர் ஏ.எல் விஜய் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சில பல காரணங்களால் இரண்டே வருடத்தில் பிரிவு ஏற்பட்டது. தொடர்ந்து சிங்கிளாக இருந்து வந்த அமலாபால், அவரது பிறந்தநாளில் காதலர் ஜெகத் தேசாயை அறிமுகப்படுத்தினார். அறிவித்த ஒரே வாரத்தில் இருவருக்கும் நட்சத்திர விடுதியில் மிக எளிமையாக திருமணம் முடிந்தது. அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இந்த நிலையில் திருமணமான இரண்டு மாதங்களில் அமலாபால் கர்பமாக இருப்பதாக போட்டோஸ் வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

photo

photo

Share this story