‘அமரன் 100’ வெற்றி விழா கொண்டாட்டம்

amaran

அமரன் 100 வெற்றி விழா கொண்டாட்டம் தொடங்கியது. 


கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் தான் அமரன். இந்த படத்தின் ரங்கூன் படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார்.

kamal

இப்படமானது மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவியும் நடித்திருந்தனர் என்று சொல்வதை விட வாழ்ந்து இருந்தனர் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

sk

அந்த அளவிற்கு தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தனர் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி. மேலும் தனது திரைக்கதையின் மூலம் முகுந்த் – இந்து ஆகிய இருவருக்குமான தன்னலமற்ற காதலை திரையில் காட்டி பல்வேறு தரப்பினடையே பாராட்டுகளை பெற்றுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.



இவ்வாறு இப்படம் என்று வரையிலும் பெரிய அளவில் பேசப்படும் நிலையில் இன்று (பிப்ரவரி 14) இந்த படத்தின் 100வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கமல்ஹாசன், ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story