‘அமரன்’ 100வது நாள் வெற்றி விழா குறித்த லேட்டஸ்ட் அப்டேட்...!

‘அமரன்’ 100வது நாள் வெற்றி விழா குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் கமல்ஹாசன். இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் வளம் வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் 2025 ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன், அமரன் திரைப்படத்தை தனது ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்த இப்படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று திரைக்கு வந்தது.
வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில்தான் அமரன் படத்தின் 100வது நாள் வெற்றி விழாவை பிப்ரவரி மாதத்தில் சென்னை சாய்ராம் கல்லூரியில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்திருந்தது. அதன்படி அமெரிக்காவிற்கு ஏஐ படிக்க சென்ற கமல்ஹாசன் இந்தியா திரும்பியதும் வெற்றி விழா நடைபெறும் என சொல்லப்பட்டது. எனவே கமல்ஹாசன் தற்போது சென்னை திரும்பியுள்ள நிலையில் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. ஆனால் அமரன் 100வது நாள் வெற்றி விழா சென்னை கலைவாணர் திரையரங்கில் நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.