‘அமரன்’ - தேம்பி தேம்பி அழுத இராணுவ குடும்பத்தினர்..

amaran

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அமரன்’. இப்படத்தை கமல் தயாரித்திருக்க சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 


இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. சமீபத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படம் வருகிற தீபாவளியன்று(31.10.2024) தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இதனால் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


இந்த நிலையில் இராணுவ வீரர்களுக்காக படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. டெல்லியில் நடந்த இந்த திரையிடலில் முக்கிய இராணுவ அதிகாரிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் கலந்து கொண்டனர். படம் பார்த்த இராணுவ குடும்பத்தினர் சில காட்சிகளில் தேம்பி தேம்பி அழுதனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Share this story