கௌதம் கார்த்திக்கு நன்றி கூறிய அமரன் பட இயக்குனர்... என்ன காரணம் தெரியுமா ?
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். இந்தப் படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவரது மனைவியாக சாய் பல்லவி நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எ.ஏ. செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். மேலும் திரைத்துறையிலிருந்தது ரஜினி, விஜய், சிவகுமார், சூர்யா, ஜோதிகா சிம்பு, இயக்குநர்கள் அட்லீ, எஸ்.ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், அஷ்வத் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர்.
Heartfelt gratitude and love:
— Rajkumar Periasamy (@Rajkumar_KP) December 18, 2024
1. To my dear brother and friend @Gautham_Karthik for agreeing the very second on my request to lend his voice for the character Asif Wani, for effective communication with the same power as displayed by the powerful performer @rohmanshawl04
2. To… pic.twitter.com/AbOGOiTa4v
இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பை பாராட்டி இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் அவரை நேரில் அழைத்து கௌரவித்தது. பின்பு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து படக்குழுவினர் வாழ்த்து பெற்றனர். இந்த நிலையில் இப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்து ராஜ்குமார் பெரியசாமி அவரது எக்ஸ் பக்கத்தில் பணியாற்றியுள்ளார். அதில், படத்தில் ஆசிஃப் வானி கதாபாத்திரத்திற்கு கௌதம் கார்த்திக்தான் குரல் கொடுத்தார் என்று அந்த பதிவில் குறிப்பிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அல்தாப் பாபா கதாபாத்திரத்திற்கு ஹரிஷ் உத்தமன் பின்னணி குரல் கொடுத்ததாகவும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.