பாலிவுட்டில் அறிமுகமாகும் அமரன் பட இயக்குனர் !

rajkumar periysamy

அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார் என தகவல் வெளியாகி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ரங்கூன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இதைத்தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படத்தை இயக்கினார். இந்த படமானது மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த நிலையில் இப்படம் கடந்த தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

rajkumar periyasamy

மேலும் இந்த படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றது போல் இந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் பலராலும் பாராட்டப்பட்டார். இதைத்தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்திற்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி வருவதாகவும் அடுத்தது இவர் பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட்டில் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள புதிய படத்தினை அனிமல் படத்தின் தயாரிப்பாளர் புஷன் குமார் தயாரிக்க இருக்கிறார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

Share this story