அமரன் : மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு சமர்ப்பணம் - லோகேஷ் கனகராஜ்

lokesh
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரித்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான இத்திரைப்படத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இத்திரைப்படம் உலகமுழுவதும் முதல்நாள் மட்டும் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களின் மிகப் பெரிய ஓப்பனிங் கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது. இந்நிலையில், அமரன் படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து மகிழ்ந்துள்ளார். கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்த ரஜினிகாந்த் இந்தப் படத்தை தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து தற்பொழுது படத்தை பார்த்த லோகேஷ் கனகராஜ் படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவை பதிவிட்டுள்ளார். அதில் இத்திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ஒரு மிகச்சிறந்த அர்பணிப்பாக அமைந்துள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குனரான ராஜ்குமார், சண்டை பயிற்சியாளரான அன்பறிவ் மாஸ்டர்ஸ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இப்படத்தை தயாரித்த என்னுடைய உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார். 


 

Share this story