அமரன் படத்தின் மேக்கிங் டீசர் வெளியீடு

Amaran

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் தனது ராஜ் கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.ஜி. வி. பிரகாஷ் இசையமைக்க, இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இராணுவத்தில் சேவை செய்த மேஜர் முகுந்த் வரதராஜன் என்பவரின் வாழ்க்கை வரலாறு தான் அமரன் திரைப்படம் ஆகும்.ஏற்கனவே இப்படத்தில் இருந்து டீசர் மற்றும் சில போஸ்டர்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது மேக்கிங் இன் ஆக்ஷன் என குறிப்பிட்டு  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு, ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this story