அமரன் ஓடிடி ரிலீஸ் அப்டேட்...!

amaran
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர். . உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அமரன் உலகளவில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் கடந்துள்ளது. இப்படமே சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படமாகும். திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் ரூபாய் 60 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் 5 அல்லது 11 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Share this story