ஓ.டி.டி.யில் வெளியானது சிவகார்த்திகேயனின் 'அமரன்' திரைப்படம்
![amaran](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/e4ed56fc8a68684cd92921dc0fb6cdf6.png)
'அமரன்' படம் சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையில் வெளியான படம் 'அமரன்'. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது.
Major Mukund-kaaga, Indhu-kaaga, Amaran poi paakalama? 🥺❤️
— Netflix India South (@Netflix_INSouth) December 5, 2024
Watch Amaran, now on Netflix in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi!#AmaranOnNetflix pic.twitter.com/nLHkslGUSL
இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்த நிலையில், 'அமரன்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.