ஜேசன் சஞ்சய்-ஐ நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது : இசையமைப்பாளர் தமன்

thaman

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் சொன்ன கதையைக் கேட்டு ஷாக்காகி விட்டதாக இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிய உள்ளார் தமன். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் கதை மற்றும் ஜேசன் சஞ்சய் குறித்து பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் தமன். அதில், “ஜேசன் சஞ்சய் குறித்து இன்னும் ஆச்சரியத்தில் தான் இருக்கிறேன். பெரிய நாயகர்களுடைய மகன் நாயகன் ஆவார், இசையமைப்பாளரின் மகன் இசையமைப்பாளர் ஆவார். இவர் எப்படி இயக்குநர் துறையைத் தேர்ந்தெடுத்தார், அதில் எப்படி இவ்வளவு வலுவாக இருக்கிறார் எனத் தோன்றும்.jason sanjay

ஏனென்றால் அவருடைய கதையைக் கேட்டு ஷாக்காகி விட்டேன். அக்கதைக்கு பெரிய நாயகன் தேதிகள் கூட கிடைத்துவிடும். ஆனால், அக்கதைக்கு சந்தீப் கிஷன் தான் சரியாக இருப்பார் என்பதில் உறுதியாக இருந்தார். தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட அனைவருமே அப்படம் கண்டிப்பாக வெற்றி என்பதில் உறுதியாக இருக்கிறோம். அவருக்கு நான் விஜய் சாருடைய மகன் என்ற கர்வம் இல்லை. அவருடன் அவ்வளவு ஜோக் அடித்து சிரித்துக் கொண்டிருப்போம். அவ்வளவு எளிமை. அவர் விஜய் சாருடைய மகன் என்பதை எங்கேயும் காட்டிக் கொண்டதே இல்லை. அப்படத்துக்கு எனது சிறப்பான இசையினை வழங்குவேன்” என்று தெரிவித்துள்ளார் தமன்.

Share this story