வெற்றிமாறன்-அமீர் கூட்டணியில் ‘மாயவலை’ டீசர் இதோ!

அமீர் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாயவலை’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஓர் இயக்குநராக தரமான படங்களை கொடுத்த அமீர் தற்போது நடிகராகவும் அசத்தி வருகிறார். குறிப்பாக வெற்றிமாறன்- அமீர்-தனுஷ் கூட்டணியில் வெளியான ‘வட சென்னை’ படத்தில் ராஜன் கதாப்பாத்தில் நடித்து மிரட்டியிருப்பர். இந்த நிலையில் அமீர் சமீப காலமாக புது புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் ‘மாயவலை’ படத்தை தயாரித்து, நடித்துள்ளார். இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் வெளியிடுகிறது. படத்தை இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் அமீர், ராஜன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து சஞ்சிதா ஷெட்டி, ஆர்யாவின் சகோதரர் சத்யா ஆகியோர் நடித்துள்ளனர்.