ரசிகர்களுக்கும், சூர்யாவுக்கும் நன்றி தெரிவித்த அமீர்

அமீர் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான படம் மௌனம் பேசியதே. அபராஜித் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் நந்தா, லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் பின்பு தெலுங்கில் ரீமேக்கானது. இப்படம் மூலம் அமீர் இயக்குநராக அறிமுகமானதும் த்ரிஷா கதாநாயகியாக உருவானதும் நினைவுகூரத்தக்கது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதையொட்டி அமீர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
A Beautiful Debuts! For@trishtrashers 🤍✨ #Ameer 🖤#MounamPesiyadhe The SuperStar for @Suriya_offl To Achieve 5Consecutive SuperHits Back2Back!💎✨ #21YearsOfMounamPesiyadhe 🖤🔥 #21YearsOfSouthQueenTrisha 🤍✨ #Kanguva pic.twitter.com/NkEb81P7zy
— KanguvaTheWarrior🗡️✨ (@Nagul_SFC) December 13, 2023
அதில்,சென்னைக்கு சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை. அப்படி கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரைக்கனவை நனவாக்கிய மௌனம் பேசியதே தயாரிப்பாளருக்கு நன்றி. என்று அதில் இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். மேலும், திரையில் என்னோடு பயணித்து வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா, த்ரிஷா, லைலா, உள்ளிட்ட நடிகர் நடிகைகளுக்கும், நன்றி கூறி பதிவிட்டுள்ளார்