அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு !

UyirThamizhukku

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல இயக்குனரும், நடிகருமான அமீர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'உயிர் தமிழுக்கு'. இந்த படத்தில் அமீருடன் இணைந்து சாந்தினி, இமான் அண்ணாச்சி, சுப்பிரமணியம் சிவா, ஆனந்த்ராஜ், மகாநதி சங்கர், ராஜ் கபூர், மாரிமுத்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

UyirThamizhukku

அமீர் முதல்முறையாக அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஆன்டி இந்தியன்' படத்தை தயாரித்த ஆதம்பாவா இந்த படத்தை தயாரித்து இயக்குனராகவும் அறிமுகமாகிறார். வித்யாசாகர் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் போஸ்ட் பிரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story