மீண்டும் ஜோடி சேரும் 'அமீர்-பாவனி' – இயக்குநர் யார் தெரியுமா?
அமீர்-பவனி ஜோடி புதிய படத்தின் மூலமாக மீண்டும் ஒன்று சேர உள்ளனர். அந்த படத்தின் சூப்பர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் பாவனி, அதே சீசனில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்தவர் அமீர். தொடர்ந்து அமீர் பாவனியை காதலிப்பதாக கூற அதனை ஏற்க மறுத்துவிட்டார் பாவனி. சீசன் முடிந்த நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் ஜோடிபோட்டு ஆடி கோப்பையை வென்றது மட்டுமல்லாமல், அமீர் பாவனியின் மனதையும் வென்றுவிட்டார்.
இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமலாமல் பாவனி கர்ப்பம் என்ற வதந்தியும் பரவியது. இந்த நிலையில் இந்த ஜோடி அஜித்தின் துணிவு படத்தின் மூலமாக வெள்ளிதிரையில் கால்பதித்தனர். அதன் நீட்சியாக மீண்டும் ஒரு புதிய படத்தில் ஜோடி போட்டுள்ளனர், இந்த படத்தை அமீரே இயக்குகிறார். படத்தில் அமீர்-பாவனியுடன் இணைந்து மன்சூர் அலிகான், காயத்ரி ஜெயராம், சுரேஷ் சக்கரவர்த்தி, சாதனா, விடிவி கணேஷ், அலீனா ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின்பூஜை நேற்று நடந்துள்ளது. முழுக்க முழுக்க ரொமான்ஸ் ஜானரில் தயாரிக்கவுள்ள இந்த படத்தை Sri Nalla Veerappasamy Production சார்பில், V. பாலகிருஷ்ணன் தயாரிக்கிறார். விரைவில் படத்தின் புரோமோ வீடியோவையும் வெளியிட உள்ளனர்.