"சின்ன ரோலானாலும் சிறப்பான ரோல்" கூலி படத்தில் நடித்தது குறித்து அமீர்கான்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் கூலி படத்தில் ஹிந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ளார் .இந்த படத்தில் நடித்தது குறித்து அவர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் .இவர் "கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ" ஆகிய படங்களை இயக்கியுள்ளார் .இவரின் அனைத்து படங்களுமே வெற்றி படங்கள் .மேலும் இவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உண்டு .
இந்நிலையில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் கூலி படத்தை எடுத்து வருகிறார் .இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது .இப்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை நடந்து வருகிறது .மேலும் இப்படத்தில் ஹிந்தி நடிகர் அமீர்கான் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார் .இந்த படத்தில் நடித்தது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமீர் கான், கூலி படத்தில் தனது ரோல் குறித்து பேசியுள்ளார். அதாவது, கூலி படத்தில் தன்னுடை ரோல் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் ,சின்ன ரோலானாலும் அது சிறப்பான ரோல் என்று குறிப்பிட்டுள்ளார் .இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது