அமிதாஷ் - சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘பரம்பொருள்’... முக்கிய அப்டேட்டை வித்தியாசமான அறிவித்த படக்குழு !

Paramporul
 அமிதாஷ் பிரதான் நடிப்பில் உருவாகியுள்ள ‘பரம்பொருள்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தனுஷ் நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் அமிதாஷ் பிரதான்.  தற்போது அவர் புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அந்தப் படத்தை அரவிந்த் ராஜ் என்பவர் இயக்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள அந்த படத்திற்கு ‘பரம்பொருள்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

Paramporul

நடிகர் சரத்குமாரும் அந்தப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். கவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் துவங்கியது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வித்தியாசமான ப்ரோமோஷனுடன் அறிவிக்கப்பட்டுள்ள அந்த டீசர் நாளை மாலை 6.10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


 


 

Share this story