“அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க மேடம்……” -ஷூட்டிங் ஸ்பாட் அவலங்களை தோலுரிக்கும் ‘அம்மு அபிராமி’.

photo

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையான அம்மு அபிராமி, படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் அவலம் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

photo

குணசித்திர வேடங்களில் நடித்து கதாநாயகியாக உயர்ந்துள்ள நடிகை அம்மு அபிராமி. இவர் நடிகர் விஜய்யின் பைரவா படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து சினிமா வாழ்கையை துவங்கினார். தொடந்து என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், அசுரன், தம்பி, தானா சேந்த கூட்டம், யானை போன்ற படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த கண்ணகி படம் ரிலீஸ் ஆனது. அதில் லீட் ரோல் செய்திருந்த அம்மு அபிராமி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் என பலரது பாராட்டுகளை பெற்றார்.

photo

இந்த நிலையில் சமீபத்திய ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் படங்களுக்கு பல கோடி செலவு செய்கிறார்கள் ஆனால் படப்பிடிப்பு தளங்களில் சரியான பாத்ரூம் வசதி கூட கிடையாது. கேட்டால அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க மேடம்… எங்கிறார்கள். மிகவும் கஷ்டமாக உள்ளது. அது எப்படி பாத்ரூம் விஷயத்தில் பொருத்துகொள்ள முடியும்? முடிந்த வரை ரெடிமேட் பாத்ரூமாவது இருந்தால் பரவாயில்லை. கண்ட கண்ட இடங்களில் பாத்ரூம் போவதால் எனக்கு இன்பெக்சன் ஆகிறது. இந்த நிலை மாற வேண்டும். பெரிய பெரிய நடிகர் , நடிகைகளுக்கு மட்டுமே கேரவன், வளர்ந்து வரும் என்னை போன்ற நடிகர்கள் மிகவும் கஷடப்படுகிறார்கள்” என மிகவும் வருத்தப்பட்டு பேசியுள்ளார் அம்மு அபிராமி.

Share this story