மிஷன் சேப்டர் 1 படத்திற்கு தமிழில் டப்பிங் பேசிய எமி ஜாக்சன்

ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தயாராகிவரும் ‘மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே’ ஸ்ரீஸ்ரீ சாய் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ளது. படம் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று முடிந்தன. தன் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு முன்னர் தந்தை சிறையில் அடைக்கப்படுகிறார். அவர் அங்கிருந்து தப்பி தனது மகளின் உயிரைக் காப்பாற்றினாரா என்பது தான் கதைக்களம்.
BTS moments from @iamAmyJackson's dubbing session 🎙️ for Mission Chapter-1 🎬#MissionChapter1 in cinemas near you from January 12th, 2024! 📽️✨@arunvijayno1 Director #Vijay @gvprakash @iamAmyJackson #NimishaSajayan @ilan_iyal @AbiHassan_ @bharat_bopana #JasonShah… pic.twitter.com/NFoAlXqZxd
— Lyca Productions (@LycaProductions) January 9, 2024
எமி ஜாக்சனும் படத்தில் காவல் துறை அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு நடிகை எமி ஜாக்சன் தமிழில் டப்பிங் பேசியிருக்கும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.