புது காதலரை கரம் பிடிக்கபோகும் எமி.

photo

இயக்குநர் பா.விஜய்யின் ‘மதராசபட்டினம்’ திரைப்படத்தில் துரையம்மாவாக நடித்து தமிழ்சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்தவர் எமி ஜாக்சன்.  முதல் படத்திலேயே பலரது பாட்டுகளை பெற்ற எமி அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் ஐ, விக்ரமுடன் தாண்டவம், தனுஷுடன் தங்கமகன், விஜய்யுடன் தெறி, பிரபுதேவாவுடன் தேவி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார். இவர் தமிழ் மொழியை கடந்து இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

photo

நடிகையாக வலம்வந்த காலத்தில் ஜார்ஜ் என்பவரை காதலித்து ஆண் குழந்தைக்கு தயானார். தொடர்ந்து அந்த காதல் கசக்கவே நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை தற்போது காதலித்து வருகிறார். அவர்கள் ஒன்றாக பல இடங்களில் சுற்றி திரியும் புகைப்படங்கள் வெளியாகி அதை உறுதிபடுத்தியது. இந்த நிலையில் எமி, விக்கை திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லமல் தனது மகனுக்கு  உலகம் தெரிய வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பிற்கு உடன் அழைத்து சென்றதாக  கூறியுள்ளார். எமி கூறியதை பார்த்தால் விரைவில் இவர்கள் திருமணம் நடக்கும் போல் தெரிகிறது.

Share this story