தாதாவாக ஆனந்த் ராஜ் நடிக்கும் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’
1728131703000

ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்கும் படத்துக்கு 'மெட்ராஸ் மாஃபியா கம்பெனி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கும் இந்தப் படத்தை அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கிறார். இதில் ஆனந்த் ராஜ் தாதாவாகவும், சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கின்றனர். முனீஸ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் படமாக இது உருவாகிறது. அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது