சில்க் ஸ்மிதா இறப்பதற்கு முந்தைய நாள்..ஆனந்த் ராஜ் வெளியிட்ட பகீர் தகவல்..!

ff


ஆந்திராவில் இருந்து தமிழ் திரை உலகில் நுழைந்து தனது கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை மர்மம் நிறைந்ததாகவே உள்ளது.இதற்கு காரணம் இவர் இறப்பு எதனால் நிகழ்ந்தது என்று இன்று வரை கண்டுபிடிக்க முடியாத புதிராகவே உள்ள நிலையில் இவர் பற்றிய சில விஷயங்கள் அண்மைக்காலமாக இணையங்களில் பல்வேறு வகைகளில் பரவி வருகிறது.
.இதனை அடுத்து சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக மாற்றி சிலர் வெளியிட்டு இருக்கிறார்கள். எனினும் அவரது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் தான் அந்த படங்களில் முழுமையாக காட்டப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ஆனந்தராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய போது, டர்ட்டி பிக்சர்ஸ் படம் பார்த்தேன் அதில் சில்க் ஸ்மிதா குறித்து மிகப்பெரிய விஷயங்கள் எல்லாம் காட்டப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது.
மேலும் படம் எடுப்பதற்கு முன்பு என்னிடம் கேட்டிருந்தால் நான் நிறைய கன்டென்ட் கொடுத்திருப்பேன். படமும் இன்னும் அருமையாக வந்திருக்கும் என கூறியிருக்கிறார்.

Silk

அத்தோடு ஒன்றும் பிரச்சனை இல்லை சில விஷயங்களை நான் கூறுகிறேன். சில்க் ஸ்மிதா இறப்பதற்கு முன்பு முந்தைய நாள் நான் கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் ஒரு ஐட்டம் பாடல் இருக்கிறது என்று கூறி சில்க் ஸ்மிதாவை நடனம் ஆட வைக்கலாமா என பட குழுவுடன் கூறிய நிலையில் அதற்கு ஒப்புதல் வாங்கி அதற்குண்டான சம்பள செக்கை சில்க் ஸ்மிதாவிடம் கொடுத்து விட்டேன்.இவர் இறந்த தினத்தன்று அவருக்காக படப்பிடிப்பு எல்லாம் தயாராக இருக்கிறது. அனைத்து நடிகர்களும் தயாராக இருந்தார்கள். மேலும் நடனம் ஆட செட் தயார் செய்யப்பட்டு எல்லாமே தயாராக இருந்தது.அந்த சமயத்தில் தான் சில்க் ஸ்மிதா இறந்துவிட்டார் என்ற தகவல் வெளியானது. 
இதனால் ஒட்டு மொத்த படக்குழுவும் திகைத்து நின்றார்கள். யாருக்குமே நாம் என்ன செய்கிறோம்.. நான் கேட்பது நிஜமா? என்று எதுவுமே தெரியவில்லை.


அப்படி ஒரு மோசமான நாளை தான் நான் சந்தித்தேன். என்னுடைய படத்தில் நடனமாட இருந்த நடிகை சில்க் ஸ்மிதா இறந்துவிட்டார் என்ற செய்தியை என்னால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story