ஆனந்தியின் 'ஒயிட் ரோஸ்' படப்பிடிப்பு நிறைவு

ஆனந்தியின் 'ஒயிட் ரோஸ்' படப்பிடிப்பு நிறைவு

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஆனந்தி. கடந்த 2014ம் ஆண்டு வெளியான ‘பொறியாளன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டில் வெளியான ‘கயல்’ படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார். இந்த படத்திற்கு பிறகு கயல் ஆனந்தி என பெயர் மாற்றம் பெற்றார். தனது சிறந்த நடிப்பால் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.  இதைத்தொடர்ந்து விசாரணை, சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இதில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படம் நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. கடைசியாக ராவண கோட்டம் படத்தில் நடித்திருந்தார்.   
ஆனந்தி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ஒயிட் ரோஸ். பூம்பாரை முருகன் தயாரிப்பில், ராஜசேகர் இயக்கத்தில் இப்படம் உருவாகி உள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. 
 

Share this story