அசோக் செல்வன் நடிப்பில் வெளியான அன்பில் அவன் -திரை விமர்சனம்
இளம் தம்பதி அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன். ஹோம் ஸ்டே என்ற புதிய பிசினஸை, குளுமை நிறைந்த மலைப்பிரதேசத்தில் இருக்கும் ரேவதியின் பங்களாவை சொந்தமாக வாங்கி தொடங்குகின்றனர். இந்நிலையில், அப்பகுதி எம்எல்ஏவின் அராஜகத்தால் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தனின் அமைதியான வாழ்க்கை ஆட்டம் காண்கிறது. அதன் விளைவுகளை படம் பேசுகிறது.
வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்த இயக்குனர் ஆர்.கார்த்திகேயன், இறுதிக்காட்சியில் காதலர்களின் வலியை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். அசோக் செல்வன் தயாரித்து நடித்துள்ளார். இது அவருக்கு ஒரு ‘கம்பேக்’ படம் என்று சொல்லலாம். பிரீத்தி முகுந்தனுடன் நெருக்கமான காதல் காட்சிகளிலும், எம்எல்ஏவுடன் மோதல் காட்சிகளிலும் அசத்தி இருக்கிறார். பிரீத்தி முகுந்தன் பளிச்சென்று இருக்கிறார், படபடவென்று பேசுகிறார். உணர்ச்சிகளை நன்கு வெளிப்படுத்தி காதல் காட்சிகளை மெருகேற்றியுள்ளார்.

