கலர்ஸ் தமிழ் சேனலில் நேரடியாக வெளியாகும் 'அன்புள்ள கில்லி' திரைப்படம்!
'அன்புள்ள கில்லி' திரைப்படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ராமலிங்கம் ஶ்ரீநாத் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘அன்புள்ள கில்லி’. இப்படத்தில் நடிகை ஶ்ரீரஞ்சனியின் மகன் மைத்ரேயா, நடிகை சாந்தினி, மைம் கோபி, தொகுப்பாளர் ஆஷிக், நாஞ்சில் விஜயன், பூ ராமு, இந்துமதி, ஸ்ரீ ரஞ்சனி, பேபி கிருத்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு லேப்ராடர் வகை நாயும் நடிக்கிறது. இந்தப் படத்தில் இடம் பெற்ற நாய்க்கு நடிகர் சூரி குரல் கொடுத்துள்ளார். இப்படத்தை Rise East Entertainment Pvt Ltd மற்றும் Master Channel சார்பில் ஶ்ரீநிதி சாகர், E. மாலா இப்படத்தினை தயாரிக்கிறார்கள். மனிதன் நாய் இடையிலான உறவு குறித்து பேசும் இப்படம் நாயின் மனகுரலில் கதை நகருவதாய் வெளிவரும் முதல் திரைப்படமாம்.

தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. 'அன்புள்ள கில்லி' திரைப்படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் பிப்ரவரி 6-ம் தேதி மாலை 7 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

