தளபதி விஜய் வெளியிட்ட அந்தகன் படத்தின் முதல் பாடல் 'அந்தகன் Anthem'
1721824989737

இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் பிரஷாந்த் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் அந்தகன். ரிலீசுக்கு தயாராகி சில ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது ஆகஸ்ட் 15ஆம் தேதி ‘அந்தகன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் பிரசாந்த் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த போதே இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டதாகவும் அந்த நட்பின் அடிப்படையில் ‘அந்தகன்’ படத்தின் புரமோஷனிற்கு உதவுவதாக விஜய் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், ’அந்தகன்’ படத்தில் இடம்பெற்றுள்ள அந்தகன் Anthem என பெயரிடப்பட்டுள்ள பாடலை விஜய் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் படத்தின் ப்ரோமோ பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.