அந்தகன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா..? நடிகர் பிரசாந்த் தகவல்
நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அந்தகன். இந்த படம் இவரது 50வது படம். இந்த படத்தினை பிரசாந்த்தின் அப்பாவும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்த படம் ஹிந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிம்ரன், ப்ரியா ஆனந்த், ஊர்வசி, பெசண்ட் நகர் ரவி, கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு, சமுத்திரக் கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மாற்றுத் தேதியில் படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக பிரசாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 9ஆம் தேதியே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. இதனை படத்தின் நடிகர் பிரசாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றது.