மின்சாரம் தாக்கி ஆந்திர ரசிகர் பலி.. குடும்பத்திற்கு ஆறுதல் சொன்ன நடிகர் சூர்யா !

suriya

சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஆந்திர ரசிகர் ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் சூர்யா நேற்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி சூர்யாவின் ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது. தமிழகத்தில் சூர்யாவின் பிறந்தநாளை கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். 

தமிழகத்தை போல மற்ற மாநிலங்களிலும் சூர்யாவிற்கு ரசிகர்கள் உள்ள நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள நரசராவ்பேட்டையில் சூர்யாவின் பிறந்தநாளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக  மோபுரிவாரி பாலம் என்ற கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும், பாபட்லா மாவட்டத்தை சேர்ந்த லே பங்ளூரை சேர்ந்த போளூரி சாய் என்பவரும் தனது நண்பர்களுடன் இணைந்து சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாட தயாராகி வந்தனர். 

suriya

இதையடுத்து சூர்யாவின் மிகப்பெரிய பிளக்ஸ் பேனர் ஒன்றை நரசராவ்பேட்டையில் வைக்க முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக பிளக்ஸ் உள்ள இரும்பு பிரேம் மின் வயரில் உரசியதால் மின் தாக்கி வெங்கடேஷ் மற்றும் போளூரி சாய் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சம்பவத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த இருவரும் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ரசிகர்கள் உயிரிழிப்பு குறித்து கேள்விப்பட்ட சூர்யா, வீடியோ கால் மூலமாக இரு குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் அப்போது உறுதியளித்துள்ளார். 

Share this story