முதலமைச்சராக நடிக்கும் நடிகர் ஜீவா... யார் அவர் தெரியுமா ?

jeeva

ஆந்திர முதலமைச்சராக நடிகர் ஜீவா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 இந்திய சினிமாவில் வாழ்க்கை வரலாற்று திரைப்பட விளக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் தங்களது துறையில் சாதித்த சாதனையாளர்கள் என பலரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

ysr

அந்த வகையில் ஆந்திராவின் முதலமைச்சராகக இருக்கும் ஒய்.எஸ்.ஆர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இந்தப் படத்திற்கு 'யாத்ரா 2' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜீவா, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராகவ் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் வரும் 2024 தேர்தலுக்கு முன்னர் வெளியாகும் என கூறப்படுகிறது. 

ஏற்கனவே 'யாத்ரா' என்ற பெயரில் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் ராஜசேகர் ரெட்டி பாதயாத்திரை சென்றது உள்ளிட்ட விஷயங்கள் காட்டப்பட்டிருந்தது. இந்த படத்தில் ராஜசேகர் ரெட்டியாக நடிகர் மம்மூட்டி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story