"மானம்கிறது நான் வாழற வாழ்க்கையில இருக்கு" - 'அனல் மேலே பனித்துளி' டிரெய்லர் வெளியீடு !

Andrea

ஆண்ட்ரியாவின் அனல் மேலே பனித்துளி டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

 நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவின் திறமையான நடிகையாக வலம் வருகிறார். நடிகை மட்டுமில்லாமல் பாடல், எழுத்து என பன்முகத்திறமை கொண்ட நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஆண்ட்ரியா எப்போதும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Andrea

தற்போது ஆண்ட்ரியா 'அனல் மேலே பனித்துளி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கைஸர் ஆனந்த் என்பவர் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கிறார். 

Andrea

இந்தப் படம் வரும் நவம்பர் 18-ஆம் தேதி நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story