'அங்காடி தெரு' சிந்து திடீர் மரணம்... சோகத்தில் ரசிகர்கள் !

sindhu

'அங்காடி தெரு' சிந்து உடல் நலக்குறைவால் இன்று திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக இருந்தவர் நடிகை சிந்து. 'நாடோடிகள்', 'தெனாவட்டு', 'நான் மகான் அல்ல', 'சபரி', 'கருப்பசாமி குத்தகைதாரர்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவர் நடித்த 'அங்காடித்தெரு' திரைப்படம் தான் சிந்துவுக்கு நல்ல பெயரை எடுத்து தந்தது. 

sindhu

அந்த படத்தில் சிந்துவின் கதாபாத்திரமும் அவர் பேசிய வசனங்களும் அவரை மிகவும் பிரபலமாக்கியது. இந்தப் படத்திற்கு பிறகு சிந்துவிற்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிட்டவில்லை. இதனால் வறுமையில் பிடியில் சிக்கி தவித்த அவருக்கு கேன்சர் பாதிப்பும் ஏற்பட்டது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது நிலை குறித்து பலமுறை யூடியுப் சேனல்களில் பேட்டியும் கொடுத்திருந்தார்.‌ அவரின் நிலை அறிந்து பல பிரபலங்கள் உதவி செய்தனர். 

இதையடுத்து புற்று நோய்க்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிந்துவின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் மரணமடைந்தார். அவரது திடீர் மறைவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story