‘தனுஷ்’ பட கதாநாயகியாகும் அஜித்தின் ரீல் மகள்!....

photo

தனுஷ் இயக்கத்தில் தயாராகும் அவரது அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்த அனிகா கமிட்டாகியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

photo

நடிகர், தயாரிப்பாள்ர், பாடலாசிரியர், பாடகர் என தனுஷ் பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்கத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ள அவர் தனது 50வது படத்தை அவரே இயக்கி நடித்தும் வருகிறார். அடுத்த கட்டமாக அவர் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் வந்துள்ளது.  கோபுரம் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் தனுஷின் அக்கா மகனான வருணை கதாநாயகனாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். படத்தின் பூஜை நடந்த நிலையில் கதாநாயகியாக அனிகா  ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story