தனுஷுடன் இணைந்த குட்டி நயன்தாரா – வெளியான சூப்பர் தகவல்.

photo

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.  அதிரடி ஆக்ஷன் நிறைந்த படமாக வெளியாகவுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. அடுத்து தனுஷின் 50வது படமாக அவரது நடிப்பு மற்றும்  இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் உருவாக உள்ளது.  அதற்காக தனுஷ் மொட்டையடித்துக்கொண்டு புது கெட்டப்பில் உள்ளார்.

photo

அந்த படத்தில் தனுஷின் சகோதரியாக துஷாரா விஜயன், சகோதரர்களாக எஸ். ஜே சூர்யா, சந்தீப் கிஷன் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் லேட்டஸ்ட் தகவலாக டி-50 படத்தில் அனிகா சுரேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிகா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். குறிப்பாக இவர் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்த ‘விஸ்வாசம்’ படம், அதில் இடம்பெற்ற ‘கண்ணான கண்னே’ பாடல் வேறலேவல் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் டி-50 படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.

Share this story