‘ராக் ஸ்டார் அனிருத்’ பிறந்தநாள் இன்று!- குவியும் வாழ்த்துகள்.

photo

இசை உலகின் ராக் ஸ்டாக வலம்வரும் அனிருத் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

photo

சினிமா குடும்ப பின்னணியை கொண்டவர் அனிருத், அதனாலேயே சினிமா மீதான ஆர்வம் அவரை தொற்றிக்கொண்டது. பள்ளி காலத்திலேயே இசைக்குழுவில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அனிருத், லயோலா கல்லூரியில் டிகிரி முடித்த கையோடு லண்டன் ட்ரினிட்டி இசை கல்லூரியில் பியானோ இசை மற்றும் சவுண்ட் இன்சினியர் படிப்பையும் முடித்தார். அதுமட்டுமலாமல் கார்நாடக இசையையும் முறையாக கற்றுள்ளார். தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘3’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் இசையமைத்த ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உலக அளவில் அவரை பிரபலமாக்கியது.

photo

தொடர்ந்து கோலிவுட்டின் முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக ‘ராக் ஸ்டாராக’  உருவெடுத்தார். தற்போது கோலிவுட்டை கடந்து பாலிவுட் எண்ரீ, வெளிநாட்டு கான்செட் என புகழின் உச்சிக்கு வளர்ந்து வரும் அனிருத் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தொர்ந்து சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

 

Share this story