முதல் ஆளாக ‘லியோ’ படத்தின் விமர்சனத்தை பதிவிட்ட 'அனிருத்'.
ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக தயாராகியுள்ள லியோ படத்தை பார்த்துவிட்டு முதல் ஆளாக விமரசனத்தை பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.
#Leo 🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥🏆🏆🏆🏆🏆
— Anirudh Ravichander (@anirudhofficial) October 9, 2023
தளபதி விஜய், த்ரிஷா பல ஆண்டுகளுக்கு பின்னர் ஜோடி சேர்ந்துள்ள படம் ‘லியோ’ இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன் என பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து படம் வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படத்தை பார்த்துவிட்டு முதல் ஆளாக விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் அனிருத்.
அதில், “ லியோ என குறிப்பிட்டு நெருப்பு மற்றும் கோப்பை எமோஜிகளை” பதிவிட்டுள்ளார். இதாற்கு முன்னர் அனிருத் ஜெயிலர், ஜவான் ஆகிய படங்களுக்கு இதுபோல எமோஜிகளை பதிவிட்டிருந்தார். தற்போது லியோவுக்கும் பதிவிட்டுள்ளதால் படம் வேறலெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.