வேட்டையன் எதிர்பார்ப்பை எகிறவைத்த அனிருத்...! புது அப்டேட்
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.படத்தின் ஷூட்டிங்க் முடிந்துள்ள நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#Manasilayo #Vettaiyan song comin soon 🥁👑🙏🏻#HunterVantaar
— Anirudh Ravichander (@anirudhofficial) August 20, 2024
இதுவரை படத்தில் இருந்து எந்த பாடல்களும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் வேட்டையன் ரிலீஸ் அப்டேட்டை பகிர்ந்த அனிருத், மனசிலாயோ என குறிப்பிட்டு வேட்டையன் பாடல் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த மனசிலாயோ வசனத்தின் பெயரிலேயே இப்பாடல் தொடங்கவுள்ளது. தலைவர் நிரந்தரம் பாடலை எழுதிய சூப்பர் சுப்பு மனசிலாயோ பாடலையும் எழுதியுள்ளார். இந்த பாடல் வரும் வார இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.