இசையமைப்பாளர் ‘அனிருத்’துக்கு காசோலை வழங்கிய ‘கலாநிதி மாறன்’.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாஸ் ஹிட்டான திரைப்படம் ‘ஜெயிலர்’. சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தை நெல்சன் இயக்கினார். அனிருத் இசையில் தாரமான பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியால் மகிழ்ந்த தயாரிப்பளர் கலாநிதி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு BMW காரை பரிசாக வழங்கினார் .அதேப்போல இயக்குநர் நெல்சனுக்கு பெரிய தொகைக்கான காசோலையை வழங்கினார். அந்த வரிசையில் இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்துள்ளார்.
ஆம், காலாநிதி மாறன் அனிருத்தை பாராட்டி காசோலை வழங்கியுள்ளார். இதனை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் பெரிய தொகையைதான் பரிசாக வழங்கியிருப்பார்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். சுமார் 200 கோடி பட்ஜெட்டில் தயாரான ஜெயிலர் படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.