‘அனிருத் வழக்கமான இசையமைப்பாளர் அல்ல’ - ஜூனியர் என்.டி.ஆர் புகழாரம்

junior ntr

அனிருத் வழக்கமான இசையமைப்பாளர் அல்ல என நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் புகழாரம் சூட்டியுள்ளார்.கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், சைஃப் அலி கான், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தேவரா’. வரும் 27-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்களுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில் ‘தேவரா’ படம் சார்ந்த நிகழ்வில் அனிருத்தை புகழ்ந்து பேசியுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். “அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தொடர்ச்சியான வெற்றிகளை குவித்த இசையமைப்பாளர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் வெளியேறிவிடுவார்கள்.அனிருத் வழக்கமான இசையமைப்பாளர் அல்ல என்று உணர்கிறேன். அவர் தனது பாடல்கள் ஹிட் ஆக வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார் மற்றும் அவரது பின்னணி இசையால் படத்தையும் உயர்த்துகிறார்.‘மாஸ்டர்’ மற்றும் ‘விக்ரம்’ ஆகிய படங்களில் அனிருத்தின் பின்னணி இசை கொண்டாடப்பட்டது. இரண்டே நாட்களில் ஒரு பாடல் கொடுக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழல் வந்தாலும், எந்தவித அழுத்தமும் இல்லாமல் இருப்பது அனிருத்திடம் நான் பார்க்கும் இன்னொரு குணம். ‘தேவரா’ ட்ரெய்லரில் அனிருத்தின் உழைப்பு ஒரு சிறு துளி தான். அவர் பெரும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார்” என ஜூனியர் என்.டி.ஆர் தெரிவித்துள்ளார்.

Share this story