ஹூக்கும் பாடலை பாடி அசத்திய அனிரூத்... ‘ஜெயிலர்’ ஆடியோ லாஞ்சில் ஆரவாரம் செய்த ரசிகர்கள் !

jailer

 ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹூக்கும் பாடலை அனிரூத் பாடிய போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். 

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ‘ஜெயிலர்’ கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

jailer

இதையொட்டி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த், கலாநிதி மாறன், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிரூத், தமன்னா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார். ‘ஜெயிலர்’ வெளியீட்டு நிகழ்ச்சி ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வருகிறது. 

jailer

இந்த நிகழ்ச்சியில் ஓபனிங்கில் இசையமைப்பாளர் அனிரூத் ஹூக்கும் பாடலை பாடி அசத்தினார். அப்போது ரசிகர்கள் அனிரூத்துடன் பாட்டு பாடி ஆரவாரம் செய்தனர். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஹூக்கும் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


 


 

Share this story