பில்போர்டு தளத்தில் அனிருத் பாடல்

பில்போர்டு தளத்தில் அனிருத் பாடல்

அனிருத் இசையில் ஜவான் படத்திலிருந்து வெளியான பாடல், பில் போர்டு தளத்தில் இடம்பெற்றுள்ளது.

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் ஜவான். இதுவரை 900 கோடி வசூலித்துள்ள இப்படம் 1000 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்துள்ள அனிருத், சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கிறார். அந்த வகையில், ஜவான் படத்திலிருந்து வெளியான சலேயா என்ற பாடல், தற்போது உலகின் பிரபலமான பில் போர்ட் தளத்தின் குளோபல் 200 பிரிவில் 97வது இடம் பிடித்திருக்கிறது. இந்த தகவலை அனிருத் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு, ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பில் போர்டு என்பது உலகளவில் பிரபலமான பாடல்களை பட்டியலிடும் ஒரு தளம். 

Share this story