அனிருத் குரலில் சொர்கவாசல் படத்தின் The End பாடல் ரிலீஸ்
ஆர்.ஜே. பாலாஜி தற்பொழுது சொர்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிடத்தில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலர் வித்தியாசமான முறையில் இருந்ததும் ரசிகர்களைக் கவர்ந்தது. பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள இந்த படம் ஜெயிலில் நடக்க கூடிய கதைக்களத்துடன் அமைந்துள்ளது. இப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.சொர்கவாசல் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் டிரெய்லர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக ஆக்ஷன் நிறைந்த காட்சிகளால் நிறைந்துள்ளது. திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆர் ஜே பாலாஜிக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை காணாத சிறையில் நடக்கும் வன்முறை மற்றும் சிறையில் இருந்து தப்பிக்கும் கதைக்களத்தை மையமாக இயக்கப்பட்ட திரைப்படமாகும். இந்நிலையில் படத்தின் பாடலான தி எண்ட் பாடல் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். அருண் ஸ்ரீனிவாசன் மற்றும் க்லிண்ட லூவிஸ் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். படத்தின் இசையை கிறிஸ்டோ சேவியர் மேற்கொண்டுள்ளார். இப்பாடலின் பெரும்பாலான பகுதி ஆங்கில வரிகள் இடம்பெற்றுள்ளது.