அனிருத்தின் உலக இசை பயணம்... விரைவில் தொடக்கம்...

அனிருத்தின் உலக இசை பயணம்... விரைவில் தொடக்கம்...

தமிழ் சினிமாவில் தற்போது கொடி கட்டி பறந்து வரும் இசையமைப்பாளர் அனிருத் தான். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘3’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் இசையமைத்த ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உலக அளவில் அவரை பிரபலமாக்கியது. அவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திற்கும் இசையமைத்துவிட்டார். தற்போது அஜித், விஜய், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு இசையமைக்க இருக்கிறார். தொடர்ந்து கோலிவுட்டின் முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக ‘ராக் ஸ்டாராக’  உருவெடுத்தார். தற்போது கோலிவுட்டை கடந்து பாலிவுட் எண்ரீ, வெளிநாட்டு கான்செட் என புகழின் உச்சிக்கு வளர்ந்து வருகிறார். 

அனிருத்தின் உலக இசை பயணம்... விரைவில் தொடக்கம்...

மேலும், ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமாகினார் அனிருத்.  இந்நிலையில், அவர் தனது ஹுக்கும்- வேர்ல்டு டூர் என்ற உலக இசைப்பயணத்தை துபாயில் தொடங்க உள்ளார். இந்நிகழ்ச்சி பிப்ரவரி 10-ம் தேதி முதல் தொடங்குகிறது.
 

Share this story