மியூசிக் டைரக்டர் அனிருத் இசை நிகழ்ச்சி -டிக்கெட் கிடைக்காமல் திண்டாட்டம் .
1752127202871
மியூசிக் டைரக்டர் அனிருத் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார் .இவரின் இசையில் பல ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளார் .இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3 ஆகும். இந்த 3 திரைப்படத்தின் வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இவரது இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த இவர், தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.இவர் சமீபத்தில் இசையமைத்த ஜெயிலர் ,விக்ரம் ,இந்தியன் 2 போன்ற படங்களின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றன
இந்நிலையில் ரசிகர்களின் விருப்பத்துக்காக மேடை இசை நிகழ்ச்சியை நேரடியாக நடத்தி, அவர்களை உற்சாகப்படுத்துவதை அனிருத் வழக்கமாக வைத்துள்ளார். சர்வதேச அளவிலான அவரது இசைப் பயணம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நிலையில், வரும் 26ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள திருவிடந்தை என்ற இடத்தில், ‘ஹூக்கும்’ என்ற பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேரடியாக பங்கேற்கும் மிகப் பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை சென்னையில் தொடங்கியது. ஆனால், தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. .