"அந்த மகிழ்ச்சியான நாட்களை என்னால் மறக்க முடியாது’-அனிருத்
1770777012000
தமிழ் படவுலகின் முன்னணி இசை அமைப்பாளரும், பாடகருமான அனிருத், இசைக்கச்சேரிகள் நடத்தி மேடையில் ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அவரை சினிமாவில் நடிக்கச் சொல்லி பல இயக்குனர்கள் அழைத்தபோது மறுத்து விட்டார். ஆனால், இசை ஆல்பங்களில் மட்டும் ஆடிப்பாடி நடிக்கிறார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ‘எனது சிறுவயதில் திருமண நிகழ்ச்சிகளில் இசைக்கருவி வாசிக்க செல்லும்போது, எனக்கு சம்பளமாக 500 ரூபாய் கொடுப்பார்கள்.
அப்போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். சில நேரங்களில் சம்பளம் கொடுக்காமல் வெற்றிலை, பாக்கு மட்டும் கொடுத்து நன்றி சொல்லி அனுப்பி விடுவார்கள். இப்போது நான் பல்வேறு மொழிப் படங்களின் இசைப்பணியில் தீவிரமாக மூழ்கியிருக்கிறேன். அதற்கு பல கோடிகளில் சம்பளம் வாங்குகிறேன். ஆனால், அப்போது எனக்கு ஏற்பட்டிருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது இசைப்பணியில் எவ்வளவு பரபரப்பாக இயங்கினாலும், அந்த இளம் பருவ காலத்தில் இருந்த மகிழ்ச்சியான நாட்களை என்னால் மறக்க முடியாது’ என்றார்.