வெப் தொடரில் நெருக்கமான காட்சிகள்.. அஞ்சலி விளக்கம்
கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் அவருடைய நடிப்பு மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.தற்போது தமிழில் அவர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. அத்துடன், தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார்.
மேலும் அஞ்சலி, ‘பாஹிஷ்கரனா’ என்ற வெப்தொடரிலும் நடித்துள்ளார். அதில் நிறைய நெருக்கமான காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகை அஞ்சலி,
‘பஹிஷ்கரனா’ வெப் தொடரில் நெருக்கமான காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. அந்த காட்சியை படமாக்கும்போது, எல்லோரையும் வெளியே அனுப்பி மட்டுமே படம்பிடித்தனர். இருப்பினும், அந்த காட்சியில் நடித்தபோது, நான் கூச்சமாகவும், டென்ஷனாகவும் உணர்ந்தேன். நான் இதுவரை எத்தனையோ நல்ல படங்களில் நடித்திருக்கிறேன், நான் நடித்த கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளேன். நான் எடுத்த கதாபாத்திரங்கள் எல்லாவற்றிற்கும் எதிர்பார்த்ததை விட மேலான பாராட்டுகள் கிடைத்துள்ளதாக அஞ்சலி கூறியுள்ளார்.