"அர்ஜூன் தாஸுடன் நடிக்கவேண்டும் என்ற ஆசை நிறைவேறியுள்ளது"-அன்னா பென்

arjun-das

ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரித்து அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கான் சிட்டி. ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்  இப்படத்திற்கு .. சென்னையில் நடந்த படவிழாவில் பேசிய அன்னா பென், ‘இது எனது 2து தமிழ் படம். இதில் எதிர்மாறான ஒரு வேடத்தில் நடித்துள்ளேன். இதுவரை நான் நடித்திராத ஒரு புதிய பரிமாணத்தில், நடிப்பு பாணியும், கதாபாத்திரத்தின் அளவும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.
அர்ஜூன் தாஸுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இப்படத்தில் நிறைவேறியுள்ளது. தமிழ் வசனங்களை பேசுவதில் எனக்கு இருந்த பயத்தை போக்க வடிவுக்கரசி உதவினார். யோகி பாபு எனது ஆயுளை 10 வருடம் அதிகரித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் எப்போதும் அனைவரையும் சிரிக்க வைத்து கொண்டே இருப்பார். கேமரா பின்னால் அவர் பேசும் அனைத்தும் நம்மை சிரிக்க வைக்கும். முதல்முறையாக இப்படத்தில் நடனமாடி இருக்கிறேன்’ என்றார்.

Share this story